பொதுவாக நாம் மின்னஞ்சல்களை open செய்யும் போது பல தொந்தரவூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலை பதிவு செய்திருப்போம்.\அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் Inbox இல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பார்ப்போம்.
Gmail இல் செயற்படுத்த ...
உங்கள் account இனுள் செல்லவும்.
வலது பக்க மேல் மூலையிலுள்ள Setting ஐ select செய்யவும்.
Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்.
நீங்கள் இப்போது "Create new filter" எனும் option ஐ காண்பீர்கள். அதைக் click செய்யுங்கள்.
இப்போது from என இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.
உதாரணமாக infoabcd@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்க வேண்டும் என்றால் infoabcd@gmail.com என type செய்ய வேண்டும்.
அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.
இப்போது அடுத்த step இல் Delete it என்பதை click செய்வதன் மூலம் e-mail கள் அனைத்தும் trash இற்கு சென்று விடும். அந்த e-mail களை திரும்ப பெற நீங்கள் செய்ய வேண்டியது "Filter" என நீங்கள் create செய்ததை delete செய்தால் சரி.
Yahoo வில் செய்ய
உங்கள் கணக்கினுள் நுழையுங்கள்.
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்.
அதில் More option ஐ select செய்யுங்கள்.
வலது பக்கத்தில் Filters என்பதை select செய்து அதில் create or edit filters என்பதை அழுத்துங்கள்.
இப்போது add என்பதை அழுத்துங்கள்.
அடுத்ததில் உங்கள் filter க்கு ஒரு பெயரை கொடுத்து விட்டு, from என்ற இடத்தில் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.
உதாரணமாக infoabcd@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்க வேண்டும் என்றால் infoabcd@gmail.com என type செய்ய வேண்டும்.
அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.
பின்னர் Move the message to: trash என அழுத்தி save செய்து கொள்ளுங்கள்.
Hotmail இல் செய்ய..
உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்.
உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்.
அதில் More option ஐ select செய்யுங்கள்.
பின்னர் Safe and blocked senders என்பதை அழுத்தி அதன் கீழ் Junk e-mail என்பதை அழுத்துங்கள்.
இப்போது blocked senders என்பதை click செய்யுங்கள்.
blocked e-mail address or domain என்ற field ல் நீங்கள் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்து save செய்து கொள்ளுங்கள்.
உதாரணமாக infoabcd@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்க வேண்டும் என்றால் infoabcd@gmail.com என type செய்ய வேண்டும்.
அனைத்து மின்னஞ்சல்களையும் முடக்க இதே போல் செய்யவும்.
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி !!!
No comments:
Post a Comment