expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Monday, September 1, 2014

Easiest and fastest way to share large files between Android devices


இரு Android சாதனங்களுக்கிடையில் மிகப்பெரும் File களை ஒரு சில வினாடிகளில் பரிமாறிக்கொள்ள இலகுவானதும் மிக வேகமானதுமான ஒரு Andoid app ஐப் பற்றிய தகவலே இது.
Wi-Fi direct மூலம் தொடர்பாகும் இந்த முறையானது மிக இலகுவாக அதிக Capacity கொண்ட வீடியோக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.
இது வரை அறிந்திரா விட்டால் ஒரு முறை முயற்சித்து பாருங்களேன்....


Super Beam- Wi-Fi direct share எனும் இந்த app ஐ உங்களது Android சாதனத்தில் download செய்து கொள்ள இந்த link க்குச் செல்லவும்..

Download SuperBeam- WiFi Direct

Download செய்து Install செய்த பின் app ஐ open செய்யுங்கள். கீழுள்ளவாறு open ஆகியிருக்கும்.

உங்கள் Phone இலிருந்து அனுப்ப வேண்டிய file வகையை தெரிவு செய்து click செய்யுங்கள். நீங்கள் வீடியோ file ஒன்றை இன்னொரு  Android சாதனத்துக்கு அனுப்ப வேண்டுமெனின் Videos எனக் காணப்படுகின்ற option ஐ select செய்யுங்கள். பின்னர் இவ்வாறு வரும்.

உங்களது mobile லிலுள்ள வீடியோக்களில் அனுப்ப வேண்டியதை select செய்து வலது பக்க மேல் மூலையிலுள்ள சரி அடையாளத்தை அழுத்தவும்.
பின்னர் உங்களது mobile ளில் ஒரு QR code தயாராகும்.
-------------------------------------------------------------

நீங்கள் பெற வேண்டிய Android சாதனத்தில் install செய்த SuperBeam app ஐ open செய்து கொள்ளுங்கள்.
(குறிப்பு: இரு Android சாதனங்களிலும் இந்த app install செய்யப்பட வேண்டும்)

அனுப்ப வேண்டிய Device இலுள்ள app ஐ open செய்து "Scan QR Code" என்பதை click செய்யுங்கள். பின்னர் ஏற்கனவே அனுப்ப வேண்டிய device இல் தயாராக உள்ள QR code ஐ பெற வேண்டிய device இன் கேமரா மூலம் Scan செய்யுங்கள்.
இவ்வாறு தோன்றும்....

அவ்வளவு தான் ஒரு சில வினாடிகளில் நீங்கள் அனுப்பிய file மற்றைய device இல் வந்து சேர்ந்திருக்கும். 

பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி !!!




No comments:

Post a Comment