expr:class='"loading" + data:blog.mobileClass'>
SKY MEDIA இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் * أهلا وسهلا ومرحبا بكم * WE WARMLY WELCOME TO SKY MEDIA WEBSITE * SKY MEDIA වෙබ් අඩෙවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු *

Thursday, October 9, 2014

E-mail இனை Logout செய்ய மறந்து விட்டீர்களா??


தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. தபால் மூலம் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் பெரும்பாலும் தற்போது மின்னஞ்சல் மூலமாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

ஆரம்பத்தில் வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் போன்ற வசதிகளை தந்த இந்த மின்னஞ்சல் தற்போது பலவகையான வசதிகளை தன்னகத்தே கொண்டு பயனர்களுக்கு இலகுவான செயற்பாட்டு முறைகளை வழங்கி வருகிறது.


இவ்வகையான வசதியை வழங்குகின்ற மின்னஞ்சல் சேவைகளில் Gmail முதலிடத்தில் இடம்பிடித்து அதிகளவு பயனர் கணக்குகளை கொண்டு காணப்படுகிறது.

இந்த Gmail இனை நாம் ஒருவரது கணனியில், அல்லது மொபைலில் பயன்படுத்தி விட்டு அவசரத்தில் Logout செய்யாமல் வந்திருப்போம். இவ்வாறு ஒருவரது கணக்கை இன்னொருவர் பயன்படுத்துவதனால் வருகின்ற விளைவுகளை நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
ஏனெனில் தற்போது இந்த மின்னஞ்சல் சேவையை பலர் தங்களது சொந்த தேவைகளுக்கவும், காரியாலய தனிப்பட்ட வேலைகளுக்ககவும் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறாக Logout செய்ய மறந்த வேளைகளில் உங்களது ஜிமெயில் கணக்கை Logout செய்து கொள்வதற்கான வசதியை ஜிமெயில் தன்னகத்தே கொண்டுள்ளது.

Logout செய்வதற்கு 

முதலில் உங்கள் Gmail கணக்கை Login செய்து கொள்ளுங்கள்.
 Gmail ன் உள்ளே அதன் வலது பக்க கீழ் மூலையில் Last Account Activity ன் கீழ் Details என்பதை கிளிக் செய்யவும்.



புதிதாக Activity on this account என்ற விண்டோ திறக்கப்படும். அதில் எங்கு, எந்த நேரத்தில் உங்கள் Gmail கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது காட்டப்படும்.

"Sign out all other sessions" ஐக் க்ளிக் செய்வதன் மூலம் அனைத்தையும் Signout செய்யலாம்.

நன்றி 

No comments:

Post a Comment